Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்சை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.



இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்சை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காரீயமும், சுவையூட்டக் கூடிய மோனோ சோடியம் குளுடாமேட் வேதிப் பொருளும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழகம், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களும் தடை விதித்தன.

பிரச்சனை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மேகி நூடுல்சை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்சை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், மேகி நூடுல்ஸ் தொடர்பாக ஆய்வு நடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
http://www.ns7.tv/ta

Post a Comment

0 Comments