Ticker

6/recent/ticker-posts

மகிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கபடமாட்டாது: ஜனாதிபதி கடிதம்!

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டினாலும் மகிந்தவுக்கு பிரதமர் பதிவி வழங்கபட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் மூலம் மகிந்தவுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை பெற்று வெற்றி பெறுமாயின் முன்னணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் சிரேஷ்ட நபர் ஒருவருக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதேவேளை கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை வழங்குவதில் தனக்கு அதிகாரம் உள்ளது எனவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments