சிரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் ஏஜியன் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளை ஏற்றிக்கொண்டு, அங்குள்ள தீவு ஒன்றை நோக்கிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியிருப்பதாக துருக்கிய அரசு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வருகிறது. இதில் பல குழந்தைகள் உட்பட 14 சிரிய நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, துருக்கியில் கரை ஒதுங்கிய சிரிய குழந்தையின் படங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளின் அவலநிலை குறித்து உலக அளவில் சீற்றத்தை ஏற்படுத்தின. தற்போது மற்றொரு குழந்தையின் உடல் கரை ஒதுங்கியிருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments