தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் மஹரகம தேசிய புற்றுநோய் நிலையத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றதும், அதற்காக விசாரணைகள் இடம்பெற்றதும் நினைவிருக்கலாம். மருந்து விநியோக நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து வைத்தியசாலையின் மருந்து கலக்கும் உத்தியோகத்தர்கள் சிலர் இந்த மோசடியில் இடம்பெற்றிருப்பது தெரிய வந்தது.இரகசியபொலிஸாரின் விசாரணைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர். 2003ம் ஆண்டு இடம்பெற்ற இந்த மோசடிக்காக கடந்த வாரமே சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியை அம்பலப்படுத்திய மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வசந்த திசாநாயக்க அவர்களுக்கு அதிரடி மாற்றம் ஒன்றை புதிய நல்லாட்சி அரசாங்கம் வழங்கியிருப்பதாக அறிய வருகிறது.
மருந்து விநியோக நிறுவனங்களோடு இணைந்து வைத்தியசாலை அதிகாரிகள் இந்த மோசடியில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், தான் இந்த ஊழலை கண்டு பிடித்த நாளிலிருந்து தனக்கு பல தொந்தரவுகளை இந்த ஊழல் அதிகாரிகள் செய்து வருவதாகவும் புற்று நோய் விஷேட நிபுணருமான வசந்த திசாயக்கா சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார்.
கடந்த 2015 ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கடமையிலிருந்த பணிப்பாளர் விலகினார். அதைத் தொடர்ந்து பிரதிப் பணிப்பாளராக இருந்த எனக்கே அந்த பதவி நிலை வரவேண்டும். ஊழல்வாதிகளை வெளிக்கொணர்ந்த காரணத்திற்காக எனக்கு அந்தப் பதவி மறுக்கப்பட்டது. என்னை கேகாலை வைத்தியசாலைக்கு பணிப்பாளராக என்னை மாற்றியிருக்கிறார்கள்.
0 Comments