இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் இறைத்தூதர் முகம்மது என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதற்காக மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று ரகுமானுக்கு "பத்வா" வெளியிட்டது.அதற்கு ரகுமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,இது குறித்து விஷ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.அதில்,ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்வா விடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் படத்துக்குத்தான் இசை அமைத்தாரே தவிர மதத்துக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.
இந்த நேரத்தில் ஏ.ஆர்.ரகுமான் தனது தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பி வர வேண்டும் என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்’’ இந்து மதம் தன் பிள்ளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என கூறியுள்ளார்.
puthiyathalaimurai.tv

0 Comments