வேலை வாய்ப்பு தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிறு வயதுள்ள குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு அவர்கள் ஐந்து வயதை தாண்டும் வரை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நடாத்தப்படும் பயிற்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். மேற்படி பயிற்சிகளில் பங்கேற்காதவர்களால் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல முடியாது.
இப்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அனுமதி பெறாதவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் திருட்டு வேலைத் திட்டமொன்று அம்பலமாகியிருக்கிறது. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல தகுதியில்லாதவர்களை வேலைவாய்ப்பு பணியகத்தின் முத்திரையை களவாக பதித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் ஓர் அரபு நாட்டு பிரஜையும், அவரது இலங்கை உதவியாளரும் இரகசிய கெமரா ஒன்றுக்குள் சிக்கியதை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டிருந்தது.
அந்த வீடியோதான் இது.

0 Comments