Ticker

6/recent/ticker-posts

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க சீனா கடும் நடவடிக்கை

சைபர் குற்றங்களைக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க சர்வதேச அளவில் புதிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.

சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து சீனாவும், அமெரிக்காவும் கடந்த வாரம் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செங் செகுவாங் (ZHENG ZEGUANG ), சைபர் குற்றங்களை சீனா கடுமையாக எதிர்ப்பதாகவும், குறிப்பாக வலை தளங்களை ஹேக் செய்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார். 
இது குறித்து சீன  வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செங் செகுவாங் கூறுகையில்,’சைபர் குற்றங்களைத் தடுப்பதில் சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை உணர்ந்துள்ளன. சைபர் குற்றங்களைத் தடுப்பதில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்’, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Post a Comment

0 Comments