![]() |
| ஐநா கூட்டத்தொடரில் மைத்தரிக்கு பின்னால் அவரின் புத்திரர் தஹம் |
மஹிந்தவோடு கூடவே இருந்த மைத்திரியை அடுத்த ஜனபதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.அவரின் நேர்மையான பேச்சுக்கும் மஹிந்தவின் குடும்ப ஆட்சியின் கொடுமைகளை கண்ணீரோடு அவர் கூறிய கதைகளுக்கும் மக்கள் பதிலளித்தார்கள்.
அந்த ஜனவரி 8ம் திகதியின் மாற்றம் தலைகீழாக மாறிக்கொண்டு வருவதனை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருப்பதை மைத்திரியின் அண்மைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மஹிந்தவின் ஊழல் பெருச்சாலிகளும், போதைப்பொருள் எத்தனோல் கடத்தல்காரர்களும் மைத்திரியின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றார்கள்..
இந்நிலையில் மஹிந்தவின் அடிச்சுவட்டையே மைத்திரியும் பின்பற்றுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக மஹிந்த அரசியல் வெளிநாட்டு விஜயங்களுக்கு நாமல் பேபியை கூட்டிக்கொண்டு திரிந்தது போல் மைத்திரி தனது தஹம் பேபியை கூட்டுக்கொண்டு திரிவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கான கூட்டத்தொடரில் பங்குபற்றச் சென்ற மைத்திரி மஹிந்தவின் பாணியில் தனது மகனையும் அழைத்துச் சென்றது அவர் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கேள்வி குறியாக்கி வருகிறது.
இன்று மாறி வரும் மைத்திரியின் நிலைப்பாடு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி மாறியும் வருகிறது.

0 Comments