Ticker

6/recent/ticker-posts

சிறுமியின் வாயையும் முகத்தையும் மூடி வெளியே கொண்டு வந்தேன் - சேயா சிறுமியின் கொலையாளி வாக்குமூலம்!

தாயின் அரவணைப்பில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை நான் தூக்க முற்பட்டபோது கண் விழித்த சிறுமி அம்மா..! அம்மா என்று அலற ஆரம்பித்தாள். உடனே நான் சிறுமியின் வாயையும், முகத்தையும் கைகளால் மூடி  வெளியே பாலடைந்த இடமொன்றுக்கு கொண்டு சென்று குற்றமிழைத்து  விட்டு  சிறுமி அணிந்திருந்த ஆடையினால் கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு  வீட்டுக்கு சென்றதாகவும் ,


அடுத்த நாள் தனது சகோதரன் ''நீ ஏன் பயந்தவன் போல் இருக்கிறாய்?'' என்று கேட்டதாகவும் அதற்கு நடந்தவற்றை தனது அண்ணனுக்கு கூறியதாகவும், இந்த விடயத்தை யாருக்காவது சொன்னால் அண்ணனை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் சிறுமி சேயா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் கொலை சந்தேக நபர் துனெஷ் பிரியசாந்த வாக்குமூலம் அளித்துள்ளான்.

கடந்த 23ம் திகதி கம்பஹா பெம்முல்ல பகுதியில் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்ட இந்த நபர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு எட்டிப்பார்த்துத் திரியும் இந்த நபர் சம்பவம் இடம்பெற்ற தினம் சேயாவின் வீட்டை எட்டிப்பார்த்த போது சேயா சிறுமி தனது தாயின் அரவணைப்பில் உறங்கிக்கொண்டிருந்ததை அவதானித்து ஜன்னலினூடாக வீட்டுக்குள் புக முயற்சித்து பின்னர் வீட்டின் வாசற் கதவு திறந்திருந்ததால் வாசற்கதவினூடாக உள்ளே சென்று அதனூடாகவே சிறுமியை தூக்கிக்கொண்டு வெளியே வந்து  பாலடைந்த இடமொன்றுக்கு கொண்டு சென்று குற்றமிழைத்து கொலை செய்ததை தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளான்.

Post a Comment

0 Comments