Ticker

6/recent/ticker-posts

கொகாகோலா வாங்குங்கள் ! கரப்பான் பூச்சி இலவசமாக கிடைக்கும்..!

களனி ஆற்றுக்கு மோசமான இரசாயணக்கலவையை வெளியெற்றியதற்காக குற்றம் சாட்டப்பட்ட கொகாகோலா நிறுவனம் இப்போது மற்றுமொரு சிக்கலில் மாட்டியுள்ளது.

கரப்பான் பூச்சியொன்று  கொகாகோலா போத்தலில் சிக்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வத்தளையைச் சேர்ந்த ஜனகபுஷ்பகுமார என்பவர் கடையில் வாங்கிய கொகாகோலா போத்தலில் வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டு அவதானித்த போது அது ஒரு இறந்த கரப்பான் பூச்சியென்பதை அவரால் உணரமுடிந்துள்ளது.

ஜனகபுஷ்பகுமார உடனடியாக அதனை தான் வாங்கிய வர்த்தக நிலையத்தினூடாக கொகாகோலா நிறுவனத்திற்கு அறிவித்துள்ளர். போத்தலின் அச்சிடப்பட்டுள்ள தயாரிப்பு குறியீட்டை பரிசோதனை செய்த கொகாகோலா நிறுவனம் அது தனது தயாரிப்பு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறது.


இந்த விவகாரத்தை வெளியிடாமல் இருக்குமாறும் அதற்காக இலப்பீடு ஒன்றை இரகசியமாக வழங்குவதற்கு கொகாகோலா நிறுவனம் தயாராக இருப்பதாகவும் ஜனகபுஷ்பகுமாரவிற்கு கொகாகோலா நிறுவனம் அறிவித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments