Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் ரிஷாதின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சின் 15 நிறுவனங்களின் மேற்பார்வை குழு தலைவராக அலி ஸாஹிர் மொளலானா நியமனம்

வியாபாரம் மற்றும் வனிகம் பற்றிய  துறைசார் குழுக்களின் மேற்பார்வை  தலைவராக சிரேஷ்ட அரசியல்வாதியும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மொளலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது துறைசார் மேற்பார்வை குழுக் கூட்டம் இன்று (8) பாராளுமன்ற குழு அறையில் பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவின் தலைமையில் நடைபெற்றபோதே பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானா வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய  துறைசார் குழுக்களின் மேற்பார்வை  தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட 20 பேர் கொண்ட மேற்பார்வை குழுவினரால்  அலி ஸாஹிர் மெளலானா ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதன் கீழ் அமைச்சர் ரிஷாதின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சின் லங்கா சதோச, Department of Commerce,Department of Company Registrars, Ceylon Industrial Development Board, National Intellectual Property of Sri Lanka, Consumer Affairs Authority, Lanka Genaral Trending C
ompany உட்பட சுமார் 15 நிறுவனங்கள் வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய  துறைசார் குழுக்களின் மேற்பார்வை  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மொளலானா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments