Ticker

6/recent/ticker-posts

தாருஸ்ஸலாம் ம.வி., தந்தை, தனயன் குரோதத்திற்குள்ளான கல்வி அபிவிருத்தி?

கடந்த இருபது வருடங்களாக ஆட்சியில் இருந்த அமைச்சார் பௌசி கொழும்பு முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கு ஒன்றுமே புடுங்கவில்லை என்பதை அவரின் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசில ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரும் நம்பப் போவதில்லை.
இவரது மகன் நவ்ஸர் பவுசி மாகாண சபை கல்வி தொடர்பாக பேசிய ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டட்டும். எதுவும் பேசாத ஊமையாகவே காலம் கடத்தியவர்தான் இந்த பௌசியின் மகன் நவ்ஸர் பௌசி .
மாகாண சபையில் ஆசனத்தை சூடாக்கியதைத் தவிர இவர் எதுவுமே செய்யவில்லை என்பதை ஏனைய மாகாண சபை அங்கத்தவர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் கல்விக்காக மட்டுமல்ல, மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற எந்த சம்பவத்திற்காகவும் இந்த வாப்பாவும் மகனும் எதையாவது பேசியிருக்கின்றார்களா?
நேற்று 01.08.2016 மாகாண சபை அங்கத்தவர்களுக்கான ஒரு கூட்டம் கொழும்பு வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் வாயே திறக்காத நவுஸர் பவுசியின் தாருஸ்ஸலாம் மீதான அக்கறையை சந்தேகித்த ஏனைய மாகாண சபை அங்கத்தவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கூட்டத்தை நிராகரித்தனர்.
சக மாகாண சபை அங்கத்தவர்களால் வழங்கப்பட்ட இந்த புறக்கணிப்பு ஒன்றே கொழும்பு முஸ்லிம்கள் தொடர்பாக இவருக்கு ஏற்பட்ட போலியான திடீர் பற்றுக்கு சாவு மணி அடித்துள்ளது.
தாருஸ்ஸலாம் தொடர்பாக இந்த அமைச்சரும், அவரது மகனும் கொழும்பு மக்களின் கல்விக்காக பாடுபடுவதாக சொல்வது பச்சப் பொய்யும், புரூடாவுமாகும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள், மஹிந்தவின் குடும்பத்தின் வியாபாரத்தின் பங்காளிகள்.
அண்மைக்காலமாக தூய எண்ணத்தோடு தனவந்தர்கள் கொழும்பில் பாடசாலைகளைக் கட்டியெழுப்ப முன்வந்த போது இந்த வாப்பாவும் மகனும் அந்த தனவந்தரை தனது கைகுக்குள் போட்டுக்கொண்டு சமூகததில் செல்லாக்காசாகிப்போன தமது பெயர்களை புதுப்பிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த தந்தையும் தனயனும் சொந்த பணத்தில் எந்த பாடசாலைக்கும் எவ்வித உதவியும் செய்யாதவர்கள். கொழும்பு மக்களின் கல்வியில் இவர்கள் கரிசனை காட்டிய வரலாறே இல்லை என்று அடித்துக் கூற முடியும்.
மறைந்த அமைச்சர் அஷ;ரப் கொழும்பிலே ஒரு தேசிய பாடசாலையை உருவாக்க முயற்சி செய்த போது அதனை தடுத்து நிறுத்தி அமைச்சர் அஸ்ரப் அவர்களுக்கு கல்முனைக்கு போய் பாடசாலை கட்டுங்கள் என்று அச்சுறுத்தியவர்.
மாளிகாவத்தை தாருஸ்ஸலாமிற்கு முன்னாள் பாராளுமனற் உறுப்பினர் சுஹைர் அவர்கள் கட்டடமொன்றுக்கு அடிக்கல் நாட்டிய போது அதனை பிடுங்கி எறிந்தவர்தான் இந்த பௌசி.
இன்று அரசியலில் காலாவதியான அவரையும், அவரின் புத்திரரையும் யாரும் நம்பாத நிலையில், கொழும்பு மக்களின் கல்விக்கு உயிர் கொடுப்போராக தம்மை காட்டிக்கொள்ளும் ஒரு பில்டப் நிகழ்வாக தாருஸ்ஸலாத்தை பயன்படுத்த இவர்கள் முன்வந்திருக்கின்றனர்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமூகத்திற்கு ஒரு பிரயோசனமின்றி தனது வயிற்றையும், குடும்பத்தையும் மட்டுமே பார்த்துக்கொண்ட இவர்கள் இறுதிவரை மஹிந்த என்ற அந்த அராஜகவாதிக்கு கூஜா தூக்கிய கிள்ளாடிகளாகத்தான் இருந்தார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால இரண்டு அப்பங்களை தின்று விட்டு கட்சி தாவியவர் என்று தனது பொக்கை வாயினால் சொல்லி புலகாங்கிதம் அடைந்தவர் தான் இந்த அமைச்சர் பௌசி. இன்று வெட்கமில்லாமல் மைத்திரியை அதே வாயினால் போற்றித்திரிகின்றார்.
அன்று அராஜகம் புரிந்த  மஹிந்தவை அரித்துத் தின்றுவிட்டு இன்று மைத்திரியை அரித்துத் தின்ன வந்தது போதாமல், கொழும்பு முஸ்லிம்களின் கல்விக்கு ஆப்பு வைக்க தந்தையும் தனயனும் அலைந்து திரிகின்றார்கள்.
இந்த சந்தர்பவாத அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். தாருஸ்ஸலாம் விவகாரம் அந்தப் பாடத்தை விரைவில் கற்றுக்கொடுக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

Post a Comment

0 Comments