எதிர்வரும் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் சிலர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் கைதானவர்களின் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை மனோ கணேசனைத் சந்தித்து முறையிட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று மாலை கூடிய ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் மனோ கணேசன் விரிவாக எடுத்துரைத்திருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஆவா குழு சந்தேக நபர்களான இளைஞர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிவரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரையும் கைது செய்வதில்லை என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் மனோ கணேசன் தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

0 Comments