Ticker

6/recent/ticker-posts

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள மியன்மாருக்கான இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நாளை 2 மணி அளவில் நடைபெறவுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மியன்மாருக்கான இலங்கை தூதரகத்தில் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதுடன், அதன் பிரதியை ஐ.நா அலுவலகத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments