மாளிகாவத்தை மையவாடிக் காணியை தனியார் நிறுவனமொன்று ஆக்கிரமிப்பு செய்து கட்டடமொன்று நிர்மாணித்து வருவது தொடர்பாக கொழும்பு மாநகரசபை ஆணையாளருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி மாநகரசபை கட்டடத்துக்கு முன்னால் டவுண் ஹோலில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
16 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையையடுத்து நடைபெறவுள்ள இவ் ஆர்ப்பாட்டத்தை இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் மற்றும் மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் என்பன ஏற்பாடு செய்துள்ளன.
கொழும்பைச் சேர்ந்த ஏனைய பள்ளிவாசல்களின் ஜமாஅத்தார்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாளிகாவத்தை மையவாடி காணி தனியார் ஒருவரினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக 2016 ஏப்ரல் மாதம் அப்போதைய மேயர் முஸம்மினால் மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம் பெற்றன.
வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் (24.08.2016) மாநகர சபையின் ஆணையாளர் வழக்கினை வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளதுடன், தற்போது மையவாடிக் காணிக்கருகில் உள்ள மின்மாற்றியொன்றினை இலங்கை மின்சாரசபை அகற்றி மையவாடி காணிக்குள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாநகரபை ஆணையாளர் வி.கே.ஏ.அநுரவுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

0 Comments