தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஊடுருவி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கறுப்புப் பூனை கமாண் டோப் படையினருக்கு சொந்த மான, www.nsg.gov.in இணைய தளம் டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.
தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இப்படையின் உரு வாக்கம், செயல்பாடுகள் மற்றும் இதர அடிப்படைத் தகவல்களும், அறிவிப்புகளும் இந்த இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன.
திடீரென இந்த இணைய தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் அவதூறான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, இணைய பக்கம் உருக்குலைக்கப்பட்டது.
‘அலோன் இன்ஜெக்டர்’ என்ற பெயரில் ‘ஹேக்கிங்’ மூலம் இணைய தளத்துக்குள் ஊடுருவிய மர்ம நபர்கள், முகப்புப் பக்கத்திலேயே கண்டிக்கத்தக்க கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.
காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்ற முழக்கத்துடன், அப்பாவி பொதுமக்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தும் புகைப்படம் ஒன்றும், இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் பதிவேற்றப் பட்டிருந்தது.
நேற்று காலை இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக இணைய தளத்தை முடக்கினர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள், இந்த சைபர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து தேசிய தகவல் மையத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இணைய தள சீரமைப்புப் பணி கள் நடந்து வருகின்றன.
0 Comments