பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வாக்னர் டே லிமா பிகுயிரோடோ (34) இவர் செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். அவர் தனது குதிரை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.இந்த நிலையில் கடந்த 1ம் தேதி ஒரு விபத்தில் சிக்கி பிகுயிரோடோ உயிரிழந்தார். இந்த நிலையில் இவரது இறுதிச்சடங்கில் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிகுயிரோடோவின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் குதிரையின் பாசத்தை கண்டு கலங்கினர். அப்போது எடுக்கப்பட்ட உருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



0 Comments