Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் TEST TUBE சோதனைக் குழாய் குழந்தை முறைக்கு அனுமதி

பாகிஸ்தானில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு அந்நாட்டு இஸ்லாமிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் டெஸ்ட் டியூப் எனப்படும் சோதனை குழாய் மூலம் குழந்தைகளை பெற்றுகொள்வது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. 

இதுகுறித்து நீண்ட காலமாக ஆலோசித்து வந்த அந்நாட்டின் இஸ்லாமிய ஷெரியத் நீதிமன்றம், சோதனை குழாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது சட்டவிரோதம் ஆகாது என தீர்ப்பளித்துள்ளது. கணவனின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டையையும் ஒன்று சேர வைத்து, கருத்தரிக்கச் செய்து, முறையான மருத்துவர்களின் மூலம் அதை மீண்டும் மனைவியின் கருப்பைக்குள் செலுத்துவது இஸ்லாமிய நன்முறைகளுக்கு எதிரானது இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments