Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் சுடுகாடாக ஆப்கானிஸ்தான் மாறும்: தாலிபான்கள் எச்சரிக்கை

அமெரிக்கா தனது படைகளை ஆப்கனிலிருந்து திரும்ப பெற்று கொள்ளாவிட்டால் ஆப்கன் கூடிய விரைவில் சுடுகாடாக்கப்படும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாலிபன்கள் செய்தி தொடர்பாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், ”ஒருவேளை அமெரிக்கா தனது படைகளை ஆப்கனிலிருந்து நீக்காவிட்டால் 21-ம் நூற்றாண்டின் சுடுகாடாக ஆப்கான் மாறக் கூடும். ஒரே ஒரு அமெரிக்க வீரர் எங்களது நிலத்தில் இருந்து அவர்கள் எங்கள் மீது போர் தொடர்ந்தால் கூட நாங்கள் எங்கள் புனித போரை தொடர்வோம்” என்று கூறியுள்ளார்.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது என்று தாலிபன்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு ஆப்கனில் அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆப்கனில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறாமல் இருக்கிறது.
"அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை போல ட்ரம்ப் பிடிவாதமாக இருக்கிறார். அவர்கள் அமெரிக்க வீரர்களை வீணடித்து கொண்டிருக்கிறார்கள். எங்களது நாட்டை பாதுகாக்க எங்களுக்கு தெரியும். ஆப்கன் அரசு அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறது. பல தலைமுறைகளாக நாங்கள் போர் புரிந்து வருகிறோம். நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் இந்தப் போரை புத்துணர்ச்சியாக எங்கள் உயிர் உள்ளவரை தொடர்வோம்" என்று ஸபிஹுல்லாஹ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments