Ticker

6/recent/ticker-posts

மலையக தொழிலாளர் முன்னணியின் தலைமைத்துவ பயிற்சிகள்

மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர்கள் 35 பேருக்கான தலைமைத்துவ பயிற்சிகள் கொழும்பு “அபேகம” வளாகத்தில் (22) நடைபெற்றது.

மலையத்தில் தற்போது மீள் எழுச்சி பெற்று வரும் மலையக தொழிலாளர் முன்னணியின் ஒரு அபிவிருத்தி செயற்பாடாக மாவட்ட தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது. பொதுவாக மாவட்ட தலைவர்களுக்கு தொழிலாளர்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் மாவட்ட தலைவர்கள் சிறந்த தலைமைத்துவ பாங்குடன் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் மலையத்தில் எந்த ஒரு தொழிற் சங்கமும் முன்னெடுக்காத இந்த வேலைதிட்டதை மலையக தொழிலாளர் முன்னணி முன்னெடுத்து வருகின்றது.

இந்த தலைமைத்துவ பயிற்சியில் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் செல்வி அனுஷா சந்திரசேகரனின் தலைமைத்துவ பயிற்சி தொடர்பான விளக்க உரையும் மலையக மக்கள் முன்னனின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமை உரையுடன் மலையக அபிவிருத்திக்கு மாவட்ட தலைவர்களின் பங்கு தொடர்பான விளக்க உரையும்¸ மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும்¸  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் அவர்களின் அமரர் சந்திரசேகரனும்¸ மலையக மக்கள் முன்னனியின் தோற்றமும் என்ற தலைப்பிலான வரலாற்று உரையும்¸ தொழில் ஆனையாளர் மகாதேவன் அவர்களின் தேசிய தொழில் சட்டங்கள் தொடர்பான விளக்க உரையும்.  பேராசிரியர் சோ. சுந்திரசேகரம் அவர்களின் “எதிர்காலவியல் நோக்கில் மலைய மக்கள்;” என்ற ஆய்வு உரையும்¸ சட்டதரணி ஜி.இராஜகுலேந்திரா அவர்களின் “ தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பொதுச் சட்டங்கள்” என்ற தலைப்பில் சட்ட உரையும்¸ மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலின் ஜயதிஸ்ஸ அவர்களின் அரசியல் உரையும்¸ சிரேஷ்ட ஊடகவியளாளர் எம்.இந்திரஜித் அவர்களின் “மலைக மக்களின் பிரச்சனைகளை ஊடகங்கள் பெருபான்மை மக்களுக்கு சரியான வகையில் கொண்டு கெல்கின்றதா” என்ற தலைப்பிலான ஊடக விளக்க உரையும். கிழக்கு மாகா பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்களின் “மலையக மக்கள் மீதான வட கிழக்கு அமைப்புகளின் ஒட்டு மொத்த பார்வை” என்ற தலைப்பிலான ஒப்பீட்டு உரையும். இடம் பெற்றது. தொடந்து 35 மாவட்ட தலைவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வுகளையும் பார்வையிட்டனர். 

உண்மையில் மலையத்தில் தோட்டங்களை மையபடுத்தி தலைமைத்தவத்தை கையில் எடுத்துள்ள தொழிலாளர்சார் தலைவர்களுக்கு இவ்வாறான பயிற்சிகள் சுற்றுலாக்கள் நடாத்தபடுவது குறைவு. தங்களது செயற்பாடுகளை அனுபவ ரீதியாகவே  மேற்க் கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் இவ்வாறான தலைமைத்துவ பயிற்சிகள் இவர்களை மேலும் வழுப்படுத்துவதுடன் தோட்ட தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரக்கனைகளுக்கு தீர்வு கிடைப்பதாக அமையும்.

இந்த செயல் தலைமைத்துவ செயல் அமர்வில் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க  அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னணியின் அரசியல்துறை¸ இணை தலைவருமான ஏ.அரவிந்தகுமார்¸ முன்னணியின் செயலாளர் நாயகம்¸ ஏ.லோரன்ஸ்¸ மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ் விஸ்வநாதன்¸ மலையக  மக்கள் முன்னனியின் பிரதி செயலாளர் செல்வி அனுஷா சந்திரசேகரன்¸ மலையக தொழிளாலர் முன்னணியின் சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன் பணிப்பாளர் எம் கனகராஜ்¸ நிர்வாக செயலாளர்

Post a Comment

0 Comments