(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இந்திய கடற்படையின் ஐ.சி.ஜி.எஸ் ஷுர் என்ற கப்பல் அண்மையில் கெப்டன் முருகன் தலைமையில் இலங்கைக்கு நற்புறவுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தது.
120 இந்திய கடற்படையினரை குழுவாக கொண்ட இந்த கப்பல், கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் நங்கூரமிடப்பட்டிருந்தது. கடல் நீரில் 7,000 கடல் மைல்கள் பயணம் செய்து, 20 நாட்களுக்கு நீடிக்கும் பல்தேவை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் குறித்த கப்பலின் செயற்குழுவினர் இலங்கை கடற்படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு கூடிய அழைப்பு விடுக்கப்பட்டு, இந்த கப்பல் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது. இதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments