பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கான விசேட மேல் நீதிமன்றத்திற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் இந்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர். பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடி தொடர்பில் அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் விசேட மேல் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments