தேசிய சகவாழ்பு ஒருமைப்பாடு கலந்துரையாடல் மற்றும் மொழிகள் அமைச்சின் கீழ் உள்ள அகலவத்தை மொழி கற்கை நிலையத்தினால் நாடுமுழுவதிலும் தோ்ந்தெடுக்கப்ப்ட 354 பாடசாலை விட்டு விலகிய மாணவ மாணவிகளை மொழிப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சா் மனோ கணேசன், பிரதியமைச்சா் அலி சாஹிா் மௌலானா, அமைச்சின் மேலதிகச் செயலாளா் ரவீந்திரன், மொழிகள் நிலையத்தின் பணிப்பாளா் தென்னக்கோன், மற்றும் பிரசாத் ஹேரத்தும் கலந்து கொண்டு பயிற்சிகளை வெற்றிகரமாக முடிந்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன்
ஏற்கனவே எமது அமைச்சு பாடசாலை மாணவா்களுக்கும் 2 வார காலங்கள் தமிழ் மொழி சிங்கள மொழி பயிற்றுவித்து 4500 மாணவா்கள் க.பொ.த.ச தரத்தில் ஏ. பி தரத்தில் சித்தியடைந்துள்ளாா்கள். இவா்களை அடுத்த மாதம் கொழும்புக்கு வரவழைத்து ஜனாதிபதி தலைமையில் வெகுமதி பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும் அவா் இங்கு அங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கணேசன்.
எதிா்காலத்தில் மாகாணசபைத் தோ்தலின் போது பழைய விருப்பு வாக்குமுறைமையே எமக்கு சிறந்தது. இக் கோரிக்கையை எனது கட்சி மட்டுமல்ல முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ,பி.டி.பி, ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளும் இக் கோரிக்கையை விடுத்துள்ளன. கடந்த உள்ளுராட்சித் தோ்தலில் அறிமுகப்படுத்திய முறைமையினால் உறுப்பினர்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றனா்.
சிறுபான்மையினருக்கும் சிறிய அரசியல் கட்சிகளுக்கு மாவட்டந்தோறும் நடைமுறைப்படுத்தும விருப்பு வாக்கு முறைமையே நன்மை பயக்கும். எனவும் தெரவித்தாா்.
0 Comments