ஜனாதிபதி சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை 10 ஆம் திகதிவரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (07.12.2018) உத்தரவிட்டுள்ளது.
வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்கள் மீதான 4 ஆம் நாள் விசாரணை நிறைவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நலீன் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
0 Comments