Ticker

6/recent/ticker-posts

சிறிசேனவுக்கு சஜித் வழங்கிய வாக்குறுதி

ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்  குற்றப்பிரேரணையை முன்வைக்க ஐ.தே.க.  கட்சி ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது  என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு  நிகழ்வைத் தொடர்ந்து ஜனாதிபதி சிறிசேனவுக்கு  இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்காலத்தில் ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்  எதிர்பார்த்திருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments