பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அமைச்சரவைக்கான சத்தியப்பிரமாணம் இன்று (17) மாலை அல்லது நாளை செவ்வாய் ( 18) இடம்பெறும் என பிரதமரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவையில் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளிவருகின்றன.
தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட மாட்டாது என அறிய வரும் நிலையில் அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை 30க்கு அதிகமாக மாட்டாது எனவும் அறிய வருகிறது.
19வது திருத்தச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் அமைச்சரவை அங்கத்தவர்களை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்தால் பாராளுமன்றத்தில் அந்த முயற்சியை தோற்கடிப்பதாக அனுரகுமார திசாயநாயக்க எச்சரிக்கை விட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments