உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது, அதனூடாக ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் கூறினார்.

0 Comments