தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன பொலிஸ் நிலையத்திற்கு எதிராக கிராம மக்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் அங்கு பதற்ற நிலைமை தோன்றியுள்ளது.
நேற்று மாலை கட்டுவன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடத்தை சுற்றிவளைக்க சென்றபோது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
பொலிஸார் தாக்கியதில் 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கிராம மக்களினால் பொலிஸார் மீது கற்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. பொலிஸாருக்கும் பொதுமக்ளுக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையில் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் கண்ணீர் புகையை பிரயோகித்து பொது மக்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனா்.


0 Comments