Ticker

6/recent/ticker-posts

சர்ச்சை வெடிக்கிறது ! சட்டம் ஒழுங்கு அமைச்சை விட்டுக்கொடுக்காத சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டம்  ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேிசிய முன்னணி அரசாங்கத்திற்கு வழங்காமல் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதாக அறிய வருகிறது. இந்த அமைச்சின் கீழேயே பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது. ஒக்டோபர் 26ம் திகதியின் பின்னர் பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிசேன கொண்டுவந்தார்.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் 51 வது பிரிவின்படி, பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகள் மட்டுமே ஜனாதிபதியின் கீழ் முடியும். அதற்கு மாறாக சட்டம் ஒழுங்கு அமைச்சையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறி செயற்படுவராக இருந்தால், மீண்டும் நீதிமன்றங்களின் துணையை நாட வேண்டிய நிலைமை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Post a Comment

0 Comments