Ticker

6/recent/ticker-posts

முச்சக்கர வண்டிக் கட்டணம் பத்து ரூபாவினால் குறைப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம்,  (02)  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 10 ரூபாவினால்  குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும் என, இலங்கை சுய தொழில் தொழிற்சங்கத்தினரின் தேசிய முச்சக்கர வண்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதற்கமைய, அதன் பயனை  பயணிகளுக்குப்  பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக,  சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிக்  கட்டணங்களைக்  குறைக்காத சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மேளனத்தின் தலைவர் மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments