Ticker

6/recent/ticker-posts

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்; 12வது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

2008ம் ஆண்டு 11  இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் 12வது சந்தேகநபர் அடையாள அணி வகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு அடையாள அணி வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது காணாமல் போன ஒருவரின் தாய் மற்றும் சகோதரியால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அதன்படி சந்தேகநபரை மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments