Ticker

6/recent/ticker-posts

பிலிப்பைன்ஸ் தேவலாயத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

பிலிப்பைன்ஸில் உள்ள தேவலாயம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகி, 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக தேவலாயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குண்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு 4 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிலிப்பைன்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பினால்  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பிலிபைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட்  நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

Post a Comment

0 Comments