Ticker

6/recent/ticker-posts

2019ம் ஆண்டிற்கு சிங்கள மொழியில் கற்பதற்கு கொழும்பு கைரிய்யா மற்றும் பாத்திமா மகளிர் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான கூட்டம்









2019ம் ஆண்டிற்கு சிங்கள மொழியில் கற்பதற்கு கொழும்பு கைரிய்யா மற்றும் பாத்திமா மகளிர் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான கூட்டம் நேற்று (06) கொழும்பு 12 ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மறுசீரமைக்கப்பட்ட ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயத்திற்கு மேற்படி நிராகரிக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்கும் நோக்கிலேயே கொழும்பு வலயக் கல்வி காரியாலயத்தின் மூலம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், மேல்மாகாணசபை அங்கத்தவர்களான ஏ.ஜே.எம். பாயிஸ், அர்ஷாத் நிஸாம் தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments