Ticker

6/recent/ticker-posts

ஜா - எல, துடெல்ல ரயில் கடவையில் விபத்து - தாயும், 8 வயது மகளும் பலி

( ஐ. ஏ. காதிர் கான் )

   ஜா - எல, துடெல்ல ரயில்  கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும், அவரது 8 வயது மகள் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

   நேற்று முன் தினம் பிற்பகல் 2.45 மணியளவில் ஜா - எல, துடெல்ல ரயில் கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று,  கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப்  பயணித்த ரயில்  ஒன்றுடன்  மோதியதில்,  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஜா - எல  பொலிஸார் தெரிவித்தனர்.

   இதன்போது,  குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் தாய், அவர்களது மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணும் சிறுமியும் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மரணமடைந்தவர்கள் ஜா - எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான சுமாலி சீலாவதி மற்றும் எட்டு வயதான சஞ்சலா சமூத்யா எனும் அவரது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

   சடலங்கள் தற்பொழுது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த நபர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஜா - எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments