Ticker

6/recent/ticker-posts

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதார குற்றவாளி; டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு


இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய ஒரு பொருளாதார குற்றவாளி என்று டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் ஏதும் அளிக்க முடியாது எனவும்  நீதிமன்றம்  தொிவித்தள்ளது. 

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்குதடை கோரியிருந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடையில்லை என்றும், விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

இந்நிலையிலேயே  விஜய் மல்லையாவை பொருளாதார குற்றவாளி என்று டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments