Ticker

6/recent/ticker-posts

இலஞ்சம் ஊழல் மிகுந்த சுங்கத் திணைக்களத்தை மீட்பது எப்படி?

இலங்கை சுங்க அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. சுங்கத் திணைக்களதிற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக  ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ஷமெல் பொ்ணாண்டோவை நியமித்ததற்கு எதிர்ப்பு தொிவித்தே இந்த வேலை நிறுத்தத்தை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

அரச நிர்வாக சேவையிலிருந்து அல்லது சுங்கத் திணைக்கள சேவையிலிருந்து  இந்த பணிப்பாளர் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதே சுங்க அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையாகும்.

தற்போது சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் பி.எம்.எஸ். சார்ள்ஸை பதவியிலிருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாகவே புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அமைச்சரவை இதற்கான முடிவை கடந்த 29ம் திகதி எடுத்திருந்தது.

சுங்கத் திணைக்களம்  என்பது எமது நாட்டின் வாயில்களாக  இருக்கும் விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றின்  காவல் அரண்களாகும். தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வராமலும் வெளியே போகாமலும் இருப்பதை உறுதிப்படுத்துவது தான் இதன் கடமை. நாட்டுக்குள் வரும் பொருட்களுக்கு சுங்கம் விதிக்கும் வரிகளின் மூலம் பணம் திறைசேரிக்கு வந்து நிறைகிறது.

அண்மையில்  இலங்கையில் வரலாற்றில் இல்லாத அளவு போதைப்பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து இருக்கிறது.  இலங்கை சுங்கத் திணைக்களம் இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய  முக்கிய நிறுவனமாகும்.

சுங்கத் திணைக்களத்தின் கவனிப்பாரற்ற பொடுபோக்கான மற்றும் ஊழல் மிகுந்த செயற்பாடுகளால் நாடு இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஊழல் மிகுந்த சுங்க அதிகாரிகளின் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் மோசமான செயற்பாடுகளினால் நாட்டுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இலகுவாக உள் நுழையக் கூடிய வாய்ப்பகள் உருவாகின்றன.

நாட்டுக்குள் வரும் போது வரி விதிக்கப்படவேண்டிய பொருட்கள் ஊழல் அதிகாரிகளால் குறைத்து வதி விதிக்கப்பட்டு அதிகாரிகளின் பொக்கட்டுகளுக்கு மீதிப்பணம் இலஞ்சமாக செல்கிறது. உதாரணமாக வரியின் மதிப்பு இரண்டு இலட்சமாக இருந்தால்  குறித்த பொருளின் வரியை ஐம்பதாயிரமாக குறைத்து அறவிட்டு  விட்டு ஐம்பதாயிரம் ரூபாவை இந்த அதிகாரிகள் இலஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனா்.

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை விரட்டி விரட்டி பணம் வசூலிப்பதில் சுங்க அதிகாரிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை பயணிகளின் அனுபவங்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.

சுங்க அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் மிகுந்த செயற்பாடுகளால்  சுங்கத் திணைக்களத்தின் வறுமானம் மிகவும் குறைந்திருப்பதாக அறிய வருகிறது.  அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரியை  அதிகாரிகள் இலஞ்சமாக  விழுங்கி வருவது இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த நிலையிலேயே புதிய பணிப்பாளராக கடற்படை அதிகாரி ஒருவரின் நியமனம் இடம்பெற்றிருக்கிறது.


Post a Comment

0 Comments