டொலுனா என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் பயனாளர்களின் நம்பகத்தன்மையை இழந்த இணையதளங்கள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
இதில் பயனாளர்களின் நம்பகத்தன்மையை இழந்த வலைத்தளங்களில் ஃபேஸ்புக் முதலிடம் பெற்றுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் டுவிட்டரும் மூன்றாம் இடத்தில் அமேசன் தளமும் உள்ளது.
ஃபேஸ்புக் மீது நம்பிக்கை இல்லை என 40% மக்கள் வாக்களித்துள்ளனர். இதேபோல், 8% பயனாளர்கள் தான் ட்விட்டர் மீது நம்பிக்கை இல்லையென தெரிவித்துள்ளனர். அமேசனைப் பொறுத்தவரையில் சேவையில் குளறுபடி, போலிகளின் ஆக்கிரமிப்பு எனப் பல குற்றச்சாட்டுகள் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்கள் சுய தகவல்களை வெளியிடத் தயங்கும் அளவுக்கு ஃபேஸ்புக்கின் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், பயனாளர்களின் மொத்த நம்பிக்கையையும் பெற்று எந்தவொரு குறைகளும் பதிவு செய்யப்படாத சிறந்த தளமாக நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை வெறும் 0.9% பேர் மட்டுமே குறை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments