கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதன் பின்னர் வன்முறைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால், காபோன் (Gabon) நாட்டில் தமது நாட்டுப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், 80 இராணுவ உறுப்பினர்களைக் கொண்ட முதலாவது குழு கபோனைச் சென்றடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொங்கோவிலுள்ள அமெரிக்க பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இராஜதந்திர வசதிகளை வழங்க வேண்டும் எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments