மாத்தறை – பெலியத்த வரையிலான ரயில் பாதையின் வௌ்ளோட்டம் இன்று (06) இடம்பெறவுள்ளது.
மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதையின் முதற்கட்டமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த வரையிலான ரயில் பாதையின் வௌ்ளோட்டமே இன்று இடம்பெறவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை முன்னெடுக்கப்படவுள்ள ரயில்சேவை 3 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் முதன்கட்டமாகவே மாத்தறையிலிருந்து 26 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெலியத்த வரையில் ரயில்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
0 Comments