Ticker

6/recent/ticker-posts

அரசியலில் எனக்கு விருப்பமில்லை. சேவை செய்வது எனக்கு விருப்பமானது - முத்தைய்யா முரளிதரன்

அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

''அரசியலுக்கு வருவதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் அரசியலில் அனுபவசாலியுமில்லை. 1,000 ரூபா வீதம் இருபது நாளைக்கு 20,000 கிடைத்தால் உங்களால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அது போதாது. 1000 இல்லை. ஆயிரத்திற்கு மேல் ஊதியம் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் தேவை. அந்தக் குடும்பத்தில் இரண்டு பேராவது வேலை செய்ய வேண்டும். 50,000 ரூபாய் இல்லாவிடில் 3 பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தை நடத்த இயலாது. தோட்டத்தொழிலாளர்களுக்கு 600 ரூபா தான் கிடைக்கிறது. 600 ரூபாவுக்கு 20 நாள் வேலை கொடுத்தால் 12,000 ரூபா. வருமானம் கீழ்நோக்கிப்போகிறது. அதை உயர்த்த வேண்டும்.  அரசியலில் எனக்கு விருப்பமில்லை. இந்த சேவை எனக்கு பிடித்திருக்கிறது.  மக்களை வைத்து ஹர்த்தால் பண்ண விடாதீர்கள். மக்களை வேலை செய்ய விடுங்கள். வேலைக்குப் போகாதே என சொல்வார்கள். அந்த பத்து நாளுக்கான காசை கொடுக்க முடியுமா? அதிலும்  பாதிக்கப்படுவது  அந்த மக்கள் தான்'' எனவும் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments