தெற்கில் 1989 காலப்பிரிவில் ஜேவிபி கிளர்ச்சியின் போது ஏராளமான இளைஞர்களை கொன்று குவித்த பொலிஸ் உயர் அதிகாரி பிரேமதாஸ உடுகம்பொல மரணமடைந்துள்ளார். இவர் 40 ஆண்டுகள் இலங்கை காவல்துறையில் கடமையாற்றியுள்ளார்.
தெற்கிலும் வடக்கிலும் பல மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர் தனது 84வது வயதில் மரணத்தைத் தழுவியுள்ளார். ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்ற 1987-1990 காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல ஈடுபட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடியது. ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது மனித உரிமை சட்டத்தரணிகள் 15 பேர் இவரின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.
தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் பேசப்பட்ட இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவருக்கு எதிராக எந்த நீதி விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது முக்கியமாக இங்க குறிப்பிடத்தக்கது.
தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் பேசப்பட்ட இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவருக்கு எதிராக எந்த நீதி விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது முக்கியமாக இங்க குறிப்பிடத்தக்கது.
0 Comments