கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் இன்று நியமித்தார்..
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, நியமனங்களை வழங்குதல் , இடம் மாற்றங்களை செய்தல் , உயர்பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உட்பட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி உயர்சபையாகும் இந்த சபையின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments