(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
SUNFO அமைப்பு ஏற்பாடு செய்யும் மத நல்லிணக்க நடை பவனி, எதிர்வரும் 10 ஆம் திகதி, காலை 10 மணிக்கு, கொழும் பு சுதந்திர சதுக்கத்திலிருந்து, விஜேராம மாவத்த ஹோட்டன் பிளேஸ் வரையும், பின்னர் மீளவும் சுதந்திர சதுக்கம் வரையும் நடாத்தப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து இறுதி நிகழ்வு சுதந்திர சதுக்க மண்டபத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறவுள்ளது.
SUNFO என்பது ஐக்கிய நாடுகளின் கொள்கைகளின்படி, சமாதானம். நல்லிணக்கம் மற்றும் மனித சமூகத்தின் நல் வாழ்வை இலக்காகக் கொண்டு செயற்படும், அரசியல் சார்பற்ற, இன சார்பற்ற, குழுவாதமற்ற ஓர் அமைப்பாகும். இலங்கை உள்ளிட்ட எல்லா நாடுகளாலும் இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெப்ரவரி மாத முதல் வாரத்தில், உலகம் முழுவதும் நிறுவனங்களும், தனிநபர்களும் சமாதானமான மற்றும் நட்பான சமூகங்களை உருவாக்கிக்கொள்ள, வேறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட தமது அயலவர்களை அறிமுகமாகிக் கொள்வதற்குமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர்.
இந்த வகையில் SUNFO அமைப்பின் SDGC FSL நிறுவனம், நாடு முழுவதும் மதஸ்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள பங்காளர்களின் இடங்களில் பல்சமய நல்லிணக்க நிகழ்வுகளை, பெப்ரவரி 01 முதல் 07 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்துள்ளது.
0 Comments