Ticker

6/recent/ticker-posts

புற்று நோய்க்காக அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படும் மருந்தை நிறுத்துவதற்கு உத்தரவு

பன்னாட்டு நிறுவனம் ஒன்றினால்  அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்துகளை சுகாதார அமைச்சு தடை செய்துள்ளது. 

அரச மருந்தக கூட்டுதாபனத்தினால் பன்னாட்டு நிறுவனம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய்க்கான மருந்தை  கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக சுகாதார போசாக்கு சுதேச மற்றும் வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

மருந்தக கூட்டுதாபனத்தின் 42 ஆவது ஓசுசல கிளையை மாத்தளை நகரத்தில் நேற்று அமைச்சர் திறந்து வைத்தார். இதன் போது இவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments