Ticker

6/recent/ticker-posts

குருநாகலில் வேன் ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி

குருநாகல் – நைலிய பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் குருநாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் வேன் மோதியுள்ளது. விபத்தினால் ரயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதித்து பயணித்ததாக குருநாகல் ரயில் நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments