சுற்றறிக்கை இல 03/2020 படி ......
ü நாட்டில்
ஆயிரம் “தேசிய பாடசாலைகள்” உருவாக்க்கப் படல் !
ü மாவட்ட
மட்டத்தில் 20
பரிபூரண “ மும் மொழி தேசிய இடைநிலை பாடசாலைகள்” உருவாக்கப் படல் !!
ü தெரிவு
செய்யப் பட்ட பாடசாலைகளை “ கேந்திர பாடசாலையுடன் இணைத்து “ பாடசாலை வலையமைப்பு” ( school
network) ஒன்றை தாபித்தல்
( ஏ எம் எம் முஸம்மில் B A Hons )
தலைவர், மலையக முஸ்லிம் கவுன்சில் .
“ பயனுறுதி மிக்க குடிமக்கள் மற்றும்
மகிழ்வாக வாழும் குடும்பம் “ எனும் தொனிப்பொருளில் இன மத மொழி வேறுபாடின்றி அனைத்து
மாணவர்களுக்கும் “ சம நியாய கல்விப் பிரவேச வாய்ப்பை வழங்கும்” நோக்கில் மேற்படி
புதிய கல்வி சீர்திருத்தக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கங்கள் தமது தேசிய கல்விக் கொள்கையில் பாரிய அளவிலான மாற்றங்களை அறிமுகப்படுத்தி அவற்றை துரித கதியில் நடைமுறைப்படுத்தவும் செய்கின்றன. கடந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தின் போது “ இசுரு பாசல் கிரமய” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. அதில் தேர்வுசெய்யப்பட்ட பல பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு பௌதீக மற்றும் மனிதவள பங்கீடுகள் போதிய அளவில் வழங்கப்பட்டு அப்பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது நாடளாவிய ரீதியில் மிகவும் சொற்பமான முஸ்லிம் பாடசாலைக இத்திட்டத்தில் உள்வாங்கப் பட்டிருந்தன . அதன் பிறகு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம்
முன்வைக்கப்பட்டது . அதனூடாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு போதிய பௌதிக வளங்களை மஹிந்தோதய திட்டத்தின் மூலம் விஞ்ஞான ஆய்வுகூடங்களாகவும் தொழில்நுட்ப மத்திய நிலையங்களாகவும் வழங்கப்பட்டு குறிப்பிட்ட தெரிவு செயற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
இத்திட்டம் குறித்த அளவு முஸ்லிம் பாடசாலைகள் உள்வாங்கப் பட்டாலும் அரசியல் செல்வாக்கு மிக்க சமூக தலைமைகளால் குறித்த திட்டங்களில் மிகவும் சொற்ப பாடசாலைகள் உள்வாங்கப் பட்டிருந்தன. அதையொட்டி ஆட்சிக்கு வந்த கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் “ லங்கம
ஹொந் தம பாசல” எனும் விசேட கல்வி அபிவிருத்தி திட்டமொன்று முன்வைக்கப்பட்டு குறிப்பிட்ட சில தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன உதாரணமாக இத்திட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஓரிரு மாதிரி பாடசாலைகளை உருவாக்கினார்கள். இதில் சகல தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கி ( ” e “ வகுப்புக்கள்) , அதி நவீன பாடசாலைகளாக
இவை உருவாக்கப் பட்டன. நகர்புற மேட்டுக்குடிகள் இப்பாடசாலைகளின் மூலம் பயன் பெற முடிந்தாலும் நாட்டில் பிற பிரதேசங்களில் உள்ள சாதாரண மக்களின் பிள்ளைகள் கற்கக்கூடிய அனேகமான பாடசாலைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் சாதகமான அடைவுகளை அடைய முடியாதிருந்தது.
ஒரு சமூகத்தை தாங்கி நிற்கும்
கல்விக்கூடங்கள் ஆனது அச்சமூகத்தின் அடைவுகளை காட்டித் தரும் நிலை கண்ணாடியாக
கருதப்படுகின்றது இலங்கையில் முஸ்லிம் கல்வி அபிவிருத்தி என்பது ஏனைய சமூகங்களுடன்
ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மையில் பின்தங்கியே காணப்படுகின்றது என்பது பொதுவான
கருத்தாக உள்ளது. அண்மைக்காலங்களில்
முஸ்லீம் கல்வி வளர்ச்சியில் ஓரளவான மாற்றங்கள் சாதகமாக காணப்பட்டாலும்
ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்களை விட மிகவும் பின்தங்கிய நிலமையே காணப்படுகின்றது.
இதற்கான மிகப் பிரதான
காரணமாக முஸ்லிம் அரசியல் தலைமைகளோ , கல்விச் சமூகமோ குறித்த விடயம் சம்பந்தமாக
போதிய அவதானம் செலுத்தாமை, அல்லது இதுவிடயமாக பாராமுகமாக செயற்படுதல் என்று
கூறலாம்.
இது சம்பந்தமாக மிகச் சுருக்கமாக விளக்குவதாயின் “ மறைந்த மலையகத் தலைவர் தன அரசியல்
வாழ்க்கையில் ஓர்பு போதும் கல்வியமைச்சராக இருந்திராத போதும் அவர் மலையக தமிழ்
கல்வி அபிவிருத்தியில் பாரியளவிலான மாற்றங்களை செய்து பலநூறு தேசிய பாடசாலைகளை
உருவாக்கிச் சென்றார். அதேவேளை மறைந்த தலைவர் ஏ சி எஸ் ஹமீது அவர்கள் ஒரு உயர்
கல்வி அமைச்சராக இருந்தும் மலையக தலைநகர் கண்டியில் ஒரு முஸ்லிம் ஆண்கள்
பாடசாலையொன்றை உருவாக்க முடியாமல் போனது. இன்றளவிலும் அது சாத்தியப் படாத நிலையே
காணப் படுகின்றது.
ஆட்சி மாற்றங்களின் போது தமது பேரம் பேசும் சக்தியை வைத்து அமைச்சுப்
பதவிகளை பெறும் எமது அரசியல் தலைமைகள் ஒரு போதும் ஒரு பிரதி கல்வியமைச்சுப் பதவியை
ஏனும் பெறுவதற்கு எமது தலைமைகள் ஒரு போதும் முன்வந்ததில்லை. ஆதாயம் தேடக் கூடிய ,
தாம் சார்ந்தவர்களை “ கவனித்துக் “ கொள்ளக் கூடிய அமைச்சுகளை பெறுவதில் பெரும்
ஆர்வங் காட்டுவார்கள். ஆனால் சகோதர தமிழ் சமூகத் தலைமைகள் இந்த விடயத்தில் மிக
சாதுர்யமாக நடந்து கொள்வார்கள். தமது பேரம் பேசும் சக்தியிநூடாக மாகாண சபைகளில்
தமிழ் கல்வி அமைச்சுகளை உருவாக்கியமை, தேசிய அரசாங்கத்தில் பிரதி கல்வியமைச்சு ,
ராஜாங்க கல்வியமைச்சு போன்றவற்றை பெற்று சூழ்நிலைகளை சாதகமாக்கி செயற்படுத்தி
காட்டியுள்ளார்கள்.
கடந்த நல்லாட்சி
அரசாங்கத்தின் ஆரம்ப கால நூறு நாள் வேலைத் திட்டத்தில் அப்போதைய கல்வி ராஜாங்க
அமைச்சராக இருந்த திரு ராதா கிருஷ்ணன் அவர்கள் , விஷேட அபிவிருத்தி திட்டமொன்றின்
கீழ் மலையகத்தின் 2௦ தமிழ் பாடசாலைகளை தெரிவு செய்து , மத்திய மாகாணத்தில் 1௦
பாடசாலைகளையும் , ஊவா மாகாணத்தில் ௦5 பாடசாலைகளையும் , சப்ரகமுவ மாகணத்தில் ௦5
பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேட்கொண்டிருந்தார், இதற்கான விஷேட
அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றிந்தார். இதில் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும்
உள்வாங்கப் படவில்லை.
அதே போல் குறித்த நூறு நாள்
வேலைத்திட்டத்தில் இலங்கையின் பதினோரு மாவட்டங்களில் தெரிவு செய்யப் பட்ட 820 தமிழ்
பாடசாலைகளில் பாடவாரியாக 3024 ஆசிரிய வெற்றிடங்களுக்காக
விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2014 மார்ச் மாதம் 9,10,11 ஆகிய திகதிகளில்
நேர்முகப் பரீட்சை நடத்தப் பட்டு பிற்காலத்தில்
நியமனங்கள் வழங்கப் பட்டன. இதன் போது தெரிவு செய்யப் பட்ட 820 தமிழ்
பாடசாலைகளில் ஒரு முஸ்லிம் பாடசாலையேனும் உள்வாங்கப் படாமல் நூறு வீத புறக்கணிப்பு
நடந்தது. இந்த அநீதிக்கு எதிராக மலையக முஸ்லிம் கவுன்சில் காத்திரமான பல
நடவடிக்கைகளை மேற்கொண்டது. முஸ்லிம் கட்சி தலைமைகளுக்கு இந்த விடயம் நேரடியாக
எத்திவைக்கப் பட்டது. ரவுப் ஹகீம் , ரிஷாத் பதியுத்தீன் ஆகியாரை ஒன்றாக இணைத்து
அப்போதைய கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை
நடத்தப் பட்டது. இந்த நியமனங்களின் ஊடாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு அநீதி
இழைக்கப்பட்டுள்ளது என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. நவமணி பத்திரிகை 2015/04/03 ந் திகதி தனது
தலைப்புச் செய்தியாக இவ்வநீதியை வெளிக் கொண்டு வந்தது. ஆனால் விளைவு பூச்சியமானது.
இது போன்ற ஒவ்வொரு விஷேட அபிவிருத்தி திட்டத்திலும் நாம் புறக்கணிக்கப் படுவதும்
எமது தலை எழுத்தானது.
தற்போது முன்மொழியப் பட்டிருக்கும் தேசிய கல்வி
சீர்திருத்த திட்டதிலேனும் எமக்கான சாகமான சூழல் உள்ளதா ?
குறித்த விஷேட கல்வி
அபிவிருத்தி திட்டங்களில் முஸ்லிம் பாடசாலைகள் உள்வாங்கப் படாமைக்கு இன்னுமொரு
காரணமாக, குறித்த திட்டங்களுக்கு
உள்வாங்கப் படுவதற்காக முன்வைக்கப் படும் பாடசாலைகளின் அடிப்படை தகைமைகளும் காரணமாகும்.
உதாரணமாக கடந்த 1௦௦௦ பாடசாலைகள் திட்டத்திற்காக உள்வாங்கப் படும் தாய் பாடசாலைக்கு
அடிப்டையில் ௦5 ஏக்கர் காணி நிலவளமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்படும் இருந்தது.
ஆனால் எமது ஊவா மாகாணத்தை பொறுத்தளவில் எந்தவொரு பாடசாலைக்கும் ஐந்து ஏக்கர் காணிவளம்
இருக்க வில்லை. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த சுற்றுநிருபங்களின்
வரையறைகளுக்குள் மாத்திரம் தங்கி நிற்காது விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாற்று
யோசனைகளை முன்வைத்து குறித்த திட்டங்களில் எமது பாடசாலைகளையும் உள்வாங்கச் செய்ய
வேண்டிய பொறுப்பு எமது அரசியல் மற்றும் சமூக தலைமைகளின் கடப்பாடாகும்.
சுற்றறிக்கை இல 03/2020 படி தற்போது முன்வைக்கப் பட்டுள்ள புதிய தேசிய கல்வி சீர்திருத்த திட்டத்திலும் சில அடிப்படை தகைமைகள் வரையறுக்கப்
பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் மூன்று பாடசாலைகள்
கேந்திர பாடசாலைகளாக ( தேசிய பாடசாலை மட்டத்திற்கு) தரமுயர்த்தப் படவுள்ளன. அதில் “
தரம் ஆறு முதல் உயர்தர வகுப்புகள் வரையுள்ள பாடசாலைகளாக இருக்க வேண்டிய அதேவேளை
மாணவர்தொகை குறைந்தது 750 இருக்க வேண்டும்”
என்று கூறப் வரையறுக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக பதுளை பிரதேச செயலக
பிரிவை எடுத்துக் கொண்டால் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையிலும் மாணவர் தொகை 750 ஆக இல்லை.
இவ்வாறான நிலையில் பதுளையில் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் இந்த திட்டத்தில்
உள்வாங்கப்பட முடியாதா ? இதற்கான மாற்று நடவடிக்கை என்ன ? . ஆகவே இவ்வாறான அனைத்து
விடயங்களையும் ஆய்வுக்கு உற்படுத்தி இதன் சாதக பாதகங்களை ஆய்ந்தறிந்து மாற்று யோசனைகளை முன்வைத்து இதன் அனுகூலங்களை
எம் சமூக ரீதியில் பெற வேண்டும் ,
பல்கலைகழக நுழைவுக்கான தெரிவு முறை மாற்றப் படுமா ?
பல்கலைக்கழக நுளைவுகளின் போது
மாவட்ட மட்ட இசட் புள்ளி முறை மாற்றப் பட்டு பாடசாலை மட்ட தெரிவு முறையொன்று ஆலோசிக்கப்
பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அவ்வாறாயின் எமது பாடசாலைகள் இதற்கான போதிய வளங்களை கொண்டதாக உள்ளனவா ? இல்லாவிட்டால்
அதற்கான மாற்றீடுகள் என்ன என்பது பற்றிய அவதானம் செலுத்தப் பட்டு தட்போதிருந்தே அதற்கான
கருத்தாடல் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப் படவேண்டும் என்பதும் காலத்தின் தேவையாக
உள்ளது.
0 Comments