அனுராதபுரம் ஹொரொவபொத்தானை பிரதேசத்தில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடாத்திய குற்றத்திற்காக பள்ளிவாயலின் தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் சகல சமய ஒன்று கூடல்களையும் தடைசெய்து இருக்கிறது. இந்த நிலையிலேயே குறித்த மஸ்ஜிதில் இன்று தொழுகை நடாத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்திலிலிருந்து நாட்டை காப்பாற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் நாடே செயலிழந்து இருக்கும் தருவாயில் குறித்த மஸ்ஜித் நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பலரினதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் தெளிவான விளக்கங்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 Comments