விமான நிலைய தரவுகளின்படி கடந்த 7 ஆம் திகதி சீனாவிலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இலங்கை வந்த சீன பயணிகள் 181 பேர் எவ்வித தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்று
ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சு விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து வருபவர்கள் தனிமைப் படுத்தப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள விஜித ஹேரத் , நோய் பரவும் சீனா நாட்டிலிருந்து வரும்
சீனர்கள் மீது எவ்வித பரிசோதனையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளாது நாட்டிற்குள் வர அனுமதிப்பது கேள்விக்குரிய விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பேரழிவு இன்னும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்தால், கடுமையான உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிகழும் என்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது ஒரு பாரிய பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை ஒரு தேசிய பேரழிவாக நீட்டிக்க விடாமல் அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments