இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த ஊரடங்கு அமுலுக்கு வர இருக்கிறது. கொரோனாவின் தீவிரம் குறித்து இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரதமர் மோடி தனதுரையில்,
" மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
0 Comments