கொரோனா வைரஸ் பீதியால் ஈரான் அரசு 70,000 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா தொற்று உள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில், இதுவரை 354 பேர் பலியாகியுள்ள சூழலில், நேற்று மட்டும் 63பேர் பலியாகியுள்ளனர். 2959 போ் நோய் தொற்றிலிருந்து பூரணமாக குணமாகியிருக்கின்றனர். மேலும், 9000 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரான் அரசு சிறை கைதிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டால் மொத்த சிறையும் பாதிக்கப்படும் என்று கருதியதால் இந்த 70,000 கைதிகளை விடுதலை செய்ய ஈரான் முடிவு செய்துள்ளது.
0 Comments